• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் – அமைச்சர் ஜெயக்குமார்

May 9, 2018 தண்டோரா குழு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’.இப்படம் வருகிற ஜூன் 7ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.இதற்கிடையில்,இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் பாடல்களை வெளியிட்டார். இப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் காலா பாடலகள் குறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,

“சமுதாயம் ஏற்று கொள்ளும் வகையில் எந்த கருத்தை தனது படங்கள் மூலம் ரஜினி தெரிவித்தார். சமுதாயத்திற்கான நல்ல கருத்துகளை எம்.ஜி.ஆர் தான் கூறினார்.‘காலா’ படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது.

திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது.‘காலா’ போன்ற காளான்கள் காணாமல் போகும்.எம்.ஜி.ஆர் தனது திரைப்படங்களில் மது,புகை பிடித்தது கிடையாது. கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது
ரஜினி அரசியலுக்கு வந்தால் நியாயம் வந்து விடுமா?காலத்தால் அழியாத பல பாடல்கள் இருக்கும் போது, காலா போன்ற பாடல்கள் காளான் போல் அழிந்துவிடும்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க