• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்

August 23, 2018 தண்டோரா குழு

பிரபல எழுத்தாளரும்,மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யார்(95) இன்று காலமானார்.

1923ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியில் பிறந்தவர் குல்தீப் நய்யார்.இடதுசாரி பார்வை கொண்ட அரசியல் விமர்சகரான இவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும்,ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

‘எல்லைகளுக்கு இடையே’,’தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை’,’நேருவுக்குப் பிறகு இந்தியா’ மற்றும் ‘ஸ்கூப்’ என புகழ்பெற்ற11 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.அவரது மறைவுக்கு பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,டெல்லி முதலமைச்சர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க