December 20, 2017
தண்டோரா குழு
ஜெ. சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார்.இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.