• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் வாரிசு என அம்ருதா தொடரப்பட்ட மனு தள்ளுபடி!

October 12, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது எனக் கூறி அம்ருதாவின் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும்.அதற்காக அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில்,1980ம் ஆண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி நான் ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன்.மூன்று மாத குழந்தையாக இருந்த போது ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன்.தற்போது எனது உறவினர்கள் மூலம் நான் ஜெயலலிதாவின் மகள் என்பதை தெரிந்து கொண்டேன்.அதனால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து குலவழக்கபடி சம்பிரதாய சடங்குகளை செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்ட்ட நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை.எனவே,இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க