• Download mobile app
23 Jan 2026, FridayEdition - 3635
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நகை, வெள்ளி மற்றும் பணம் கொள்ளை

August 26, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மளிகைக் கடை வைத்து இருக்கும் இவர் நேற்று விடுமுறை என்பதால் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர் காலை திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தலைவாசல் காவல் துறையினர் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் படிக்க