• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி முதல் சிப் இல்லாத டெபிட் & கிரெடிட் கார்டுகள் இனி செல்லாது

November 27, 2018 தண்டோரா குழு

ஜனவரி 1 2019 முதல் சிறிய மின்னணு சிப் பொருத்தப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ரிசர்வ் வங்கியின் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

சில ஆண்டுகளாக டெபிட்,கிரெடிட் கார்டுகளால் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.இதனை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது.அதன்படி சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்குபடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

தற்போது உபயோகிக்கும் கார்டுகளின் பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் என்கிற காந்தக்கோடுகள் உள்ளது.அதற்கு பதிலாக பாதுகாப்பு நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்தப்பட்ட கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால்,ரிசர்வ் வங்கியில் இந்த புதிய விதிமுறைகளை எந்த வங்கிகளும் பின்பற்றவில்லை.இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.அடுத்த வருடத்தில் இருந்து பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படும் வாடிக்கையாளர்கள் புதிய கார்டுகளை வங்கியில் விண்ணப்பித்து சிப் உள்ள கார்டுகளை பெற வேண்டும்.

மேலும் படிக்க