• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கலைப்பு ஏன் ? – ஆளுநர் விளக்கம்

November 22, 2018 தண்டோரா குழு

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் மறைவுக்குப் பின்னர் அவரது மகள்,மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி,பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து,கூட்டணியில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது.இதையடுத்து,தனது முதலமைச்சர் பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார்.

இதனால் பாஜக,மக்கள் ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்ந்தது இதனால் சட்டமன்றம் முடக்கப்பட்டிருந்தது.காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இன்று மெஹபூபா உரிமை கோரினார்.இதனைஅடுத்து 5 மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நேற்றிரவு சட்டமன்றத்தை கலைக்கும் படி ஆளுநர் சத்தியபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, ஆளுநரின் இந்த நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில்,இது குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக்,

“சட்டமன்ற கலைப்பு என்பது தவறான தருணத்தில் எடுக்கப்பட்டது இல்லை,சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது.குதிரை பேரம் நடப்பதாக இரு தரப்பிலிருந்தும் தகவல் வந்தது.மாநிலத்தில் தற்போதுதான் பாதுகாப்பு நிலைமை சிறப்பாக இருக்கிறது.ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கல் எறியும் சம்பவம் நடக்கவில்லை.உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடந்துள்ளது.இந்த தருணத்தில் குழப்பம் ஏற்படுத்துவது மாநிலத்தின் நலனுக்கு ஏற்றது அல்ல,இக்கட்சிகளில் எவருக்கும் பெரும்பான்மை இல்லை.ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையுடன் யாரும் வரவில்லை.கடந்த ஐந்து மாதங்களாக ஜனநாயகம் செயல்பட்டு கொண்டுதான் இருந்தது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டது.ஆனால்,அபாயம் ஏற்படும் நிலை வந்ததால் சட்டசபை கலைக்க வேண்டியதாகிவிட்டது.

மேலும் மெஹபூபா,தன்னுடைய அழைப்புகள் மற்றும் பேக்ஸ்களை பார்க்கவில்லை என்று ஆளுநர் மீது புகார் வைத்தது குறித்து பேசிய ஆளுநர்,நேற்று மிலாது நபி என்பதால் ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் யாரும் இல்லை.இதற்கு முன்பாகவே அவர் என்னை சந்திருக்க வேண்டும்.அவருடைய பேக்ஸ்ஸுகள் எனக்கு கிடைத்திருந்தாலும் என்னுடைய முடிவில் எந்தவித மாற்றமும் நிகழ்ந்திருக்காது”என்றுக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க