January 23, 2018
தண்டோரா குழு
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எழுச்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி கண்டு ஒரு வருடம் ஆனதை குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில்,”இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!”, என்று குறிப்பிட்டுள்ளார்.