December 27, 2017
தண்டோரா குழு
இமாச்சல பிரதேச முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இமாச்சலப்பிரதேசத்தில் அண்மையில் நடைப்பெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது.இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில்,இமாச்சலப்பிரதேசத்தின் 13-வது முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் இன்று தனது அமைச்சரவையுடன் பதவியேற்றுக்கொண்டார்.இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.