• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் விநியோகம்

October 27, 2016 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் “குரூப் – 4” தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 5,451 அரசுத் துறைக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் – 4 தேர்வு நவம்பர் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து பல லட்சம் பேர் அனுப்பியுள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான ஹால் டிக்கெட் வியாழக்கிழமை (அக்டோபர் 27) வெளியாகியுள்ளது.

இதனை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளங்களான www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதாவர்கள் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்குப் பணம் கட்டிய ரசீதுடன் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என இணையதளத்தில் குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் படிக்க