• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மாக் 3 ராக்கெட்

November 14, 2018 தண்டோரா குழு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான,’இஸ்ரோ’ சார்பில்,அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக,’ஜிசாட் – 29′ என்ற செயற்கைகோள்,இன்று(நவ.,14) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு,வானிலை,பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக,பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன்,செயற்கைகோள்களை, இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது.இங்கிலாந்து நாட்டின் இரண்டு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் உதவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.இதனைத் தொடர்ந்து அதிக எடை கொண்ட ஜி சாட் 29 செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 – டி2 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவும் பணியில் கடந்த சில மாதங்களாக இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில்,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 5.08 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மாக் 3- டி2 ராக்கெட் உதவியுடன் அதிநவீன திறன் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜி சாட் 29 செயற்கைகோளை இஸ்ரோ திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தியுள்ளது.இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.இந்த செயற்கைகோளானது 3,423 கிலோ எடை கொண்டதாகும்.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள,ஜிசாட் – 29 செயற்கைகோள்,குக்கிராமங்களையும் உள்ளடக்கி,நாடு முழுவதும்,அதிநவீன தகவல்தொடர்பு சேவையை மேம்படுத்த,முக்கிய பங்காற்றும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட்டை விட தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் இரண்டு மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ராக்கெட் இஸ்ரோவின் மைல் கல்லாக அமைந்துள்ளது.ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க