January 20, 2018
தண்டோரா குழு
அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால்,சமந்தா,அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இரும்புத்திரை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று நடைப்பெற்றது.
இவ்விழாவில் நடிகர் விஷால் பேசுகையில்,
“அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்.அரசியல்வாதி என்பவர் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். நான் அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.மேலும்,விஜய் மல்லையாவை மனதில் வைத்துக்கொண்டு தான் சண்டைக் காட்சியில் ஒரு நடிகரை உண்மையாக அடித்தேன்”. என்றுக் கூறினார்.