• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை லஞ்சம் வழக்கு – டிடிவி தினகரனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

November 17, 2018 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை விடுவிக்க நீதிமன்றம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி டிடிவி தினகரன் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் 69 நாள் சிறையில் இருந்த டிடிவி தினகரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.பின்னர் டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் இருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில்,தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.இதையடுத்து இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்லஞ்சம் கொடுக்க முயற்சித்தல்,மோசடி,சாட்சியங்களை கலைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் டி.டி.வி. தினகரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் தினகரன்,சுகேஷ் சந்திரசேகர்,மல்லிகார்ஜுனா,குமார் ஆகியோர் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது.

குற்றப்பத்திரிக்கை ஏற்கப்பட்டதால் டிடிவி தினகரன் மீது டிசம்பர் 10ல் குற்றச்சாட்டை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.டி.டி.வி தினகரன் டிசம்பர் 4ம் தேதி நேரில் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்றும் இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.மேலும்,வழக்கில் இருந்து நத்துசிங்,லலித் குமார்,குல்பித் குந்த்ரா உள்பட 5 பேரை விடுவித்து டெல்லி நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க