• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நேரம் மாற்றம்

May 9, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் மற்றும் பைனல் போட்டிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.இதில்,சென்னை,மும்பை,ராஜஸ்தான்,டெல்லி,ஹைதராபாத்,கொல்கத்தா, பஞ்சாப்,பெங்களூரு என 8 அணிகள் விளையாடி வருகின்றன.ஐபிஎல் போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.சில நேரங்களில் மழையால் போட்டிகள் தாமதாமாக முடிகிறது.இதனால் ரசிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில்,

“ஐபிஎல் போட்டியை நேரடியாகவோ அல்லது டிவியிலேயோ பார்க்கும் ரசிகர்கள் தாமதமாக முடிவதால் பாதிக்கப்படுகின்றனர்.போட்டி தாமதமாக முடிவதால் மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அடுத்த நாள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால்,பிளே ஆப் மற்றும் பைனல் போட்டிகள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு துவங்கும் என்றார்.அதன்படி முதல் தகுதி சுற்று மே 22(மும்பை),எலிமினேட்டர் மே 23 (கொல்கத்தா),இரண்டாவது தகுதி சுற்று மே 25(கொல்கத்தா),பைனல் மே 27(மும்பை) ஆகிய போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்கும்”.

மேலும் படிக்க