• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குமரகுரு கல்லூரியில் மிதிவண்டி பகிர்வு திட்டம் அறிமுகம்

January 6, 2018 தண்டோரா குழு

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மொபைல் பயன்பாட்டின் மூலம் இயக்கப்படும் உலகின் முதன்மையான மிதிவண்டியை “OFO”நிறுவனம் இன்று(ஜன 6) அறிமுகப்படுத்தியுள்ளது.

OFO நிறுவனம் சுற்றுச் சூழலை பாதிக்காத வகையிலும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,மொபைல் ஆப் மூலமாக இயங்கும் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.வழக்கமாக சைக்கிள்களில் சாவியை போட்டு திறப்பதற்கு பதிலாக, இவர்கள் உருவாக்கி உள்ள இந்த மொபைல் ஆப் மூலமாக சைக்கிளை திறக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.இந்த திட்டத்தை கோவை மாநகரஆணையாளர் விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.

இந்த திட்டம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,

இப்போது இந்த ஆரோக்கியமான திட்டத்தை ஒரு சிறிய அளவில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியுள்ளோம். இந்த திட்டங்களை நகருக்குள் விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுளோம்.இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,வாகனங்களால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் சைக்கிளை இந்த புதிய தொழில்நுட்பங்களுடன் பயன்படுத்த வேண்டும் எனவும், குறைந்த தொலைவில் செல்வதற்கு சைக்கிளை பயன்படுத்த வேண்டும்.

இதுகுறித்து OFO தகவல் தொடர்பு இயக்குனரான ரஜர்ஷி சஹாய் கூறுகையில்,

“குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் எங்கள் மிதிவண்டி பயன்படுத்தப்படுவதை நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.இந்த திட்டம் ஜனவரி மாதம் தொடங்கி,மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து விருப்பத்தை வழங்கும்.

மேலும்,இந்த திட்டம் மூலம், மக்களுக்கு ‘சுலபமாக பயன்படுத்தக்கூடிய’ மிதிவண்டி பகிர்வு அனுபவத்தின் மூலம் மக்களுக்கு வழங்குவதோடு, மிதிவண்டி ஓட்டுதல் தொடர்பான பல்வேறு நன்மைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம்.இந்த திட்டம் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்”. என்று கூறினார்.

மேலும் படிக்க