• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசியா:நிலநடுக்கம்,சுனாமிக்கு 384பேர் பலி

September 29, 2018 தண்டோரா குழு

இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர்.இதனால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டததையடுத்து,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேஷிய பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்தது.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என எச்சரித்திருந்தது.இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.

சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின.திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது.இந்தோனேஷியா நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க