• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேஷியா விமான விபத்து:பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் – தேடுதல் குழு

October 29, 2018 தண்டோரா குழு

இந்தோனேசியாவில்,லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.தலைநகர் ஜகார்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.அதைபோல்,வழக்கம்போல் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர்நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை,பங்க்கால் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் 8 பணிப்பெண்கள்,2 விமானிகள்,2 குழந்தைகள்,ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர்.விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில்,விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.விமான நிலைய கட்டுப்பாட்டு அறை,ஜேடி-610 பயணிகள் விமானம் காணாமல் போனதாக அறிவித்தது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.இதற்கிடையில்,அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசியா கடலில் மிதக்கின்றன.அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும்,விபத்திற்குள்ளான விமானத்தில் விமானியாக பணியாற்றியவர் டெல்லியை சேர்ந்த பவி சுனேஜா என தெரிய வந்துள்ளது.போயிங் 737 ரக விமானங்களை இயக்குவதில் திறமை மிகுந்தவரான பவி சுனேஜா,டெல்லிக்கு பணி மாற விரும்பினார்.31 வயதாகும் பவி சுனேஜா,சர்வதேச விமானி உரிமம் பெற்றவர்.2011 மார்ச் மாதத்தில் இந்தோனோஷியாவின் லயன் ஏர் விமான நிறுவனத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க