January 22, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கி டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும், அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும். அடுத்த மாதம் தொடங்க உள்ள பயணத்தில் பல சகோதரர்கள் கிடைப்பார்கள் என்று கூறினார்.
மேலும், நாட்டில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன் என்றார்.