August 9, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் படிக்க சென்ற 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் கோவையில் உள்ள வெளிநாட்டிற்கு மாணவர்களை அனுப்பும் நிறுவனங்கள் தங்களுக்கும்,அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டிற்கு பின்னர் ஆஸ்திரேலியா நாட்டில் படிக்க என்.பி.ஏ. என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் போலியாக அச்சான்றிதழ் கொடுத்ததாக,இந்தியாவைச் சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் இயங்கி வரும் மெரூ என்ற நிறுவனமும்,ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் சியா என்ற நிறுவனமும் 22 பேரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாக தகவல் வெளியானது.இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அந்த இரண்டு நிறுவனங்களும்,இதுதொடர்பாக எந்த புகாரும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும்,கனடா மற்றும் ஜெர்மனி நாடுகளில் குடியுரிமை வாங்கி தருவதில் தான் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும்,ஆஸ்திரேலியா நாடு கல்வி தொடர்பான எந்த பணிகளையும் செய்யவில்லை எனவும் மெரூ நிறுவன உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.