• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டறிந்த இந்திய சிறுவன்

August 29, 2016 தண்டோரா குழு

ஐக்கிய ராஜ்யத்தின் தலைநகரான பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான,மருந்துகளுக்குக் கட்டுப்படாத மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன்கள் காரணமாக உள்ளன.இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இந்தப் புற்றுநோயின் உயிரணுக்கள் வளர்வதை டமோக்சி பென் போன்ற மருந்துகள் மூலம் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

எனினும்,3 எதிர்மறை மார்பக புற்றுநோயை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது.அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கிய கூட்டு மருத்துவ முறையில் தான் சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தச் சிகிச்சை முறைகளில் நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் குறைவானது.இந்நிலையில், இந்த வகை புற்றுநோய்க்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம்(16) கண்டுபிடித்துள்ளார்.இது குறித்து அவர் பேசும் போது,மருந்துக்குக் கட்டுப்படாத புற்று நோய்களை மருந்துகளுக்குக் கட்டுப்பட வைக்கும் சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

என்னுடைய ஆராய்ச்சியை என்னுடைய பள்ளியில் உள்ள ஆய்வுகூடத்திலும் மற்றும் வீட்டிலும் செய்தேன்.அதன் பலனாக,இது வரை மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.மேலும், அவர் இந்த ஆய்வை உருவாக்க அறிவியல் சமூகத்தின் உதவி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

மேலும், இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையையும் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மனநிலை பாதிப்பு (அல்ஸீமர்) நோயை முன்கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டுபிடித்ததற்காக கடந்த ஆண்டு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க