January 23, 2018
தண்டோரா குழு
இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் மேஜர் சிர்கார் நேற்று முன் தினம்
(ஜன 21)காலமானார்.
குஜராத் மாநிலத்தின் அலகாபாத் நகரை சேர்ந்தவர் சிர்கார்(101). இவர் இந்திய ராணுவப் படையின் அஸ்ஸாம் 2வது படைப்பிரிவில் பணியாற்றினார். இவர் இரண்டாம் உலகப் போர், 1947-48ம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தான் போர், மற்றும் 1962ம் ஆண்டு இந்திய-சீனப் போரில் பங்கு பெற்ற இவர் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார்.
மறைந்த சிர்கார் தன்னுடைய 95வது வயதில்,’The Memories of a soldier’என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.அவருடைய உடல் இந்திய இராணுவ மரியாதையுடன், இராஜபூர் கல்லறையில் புதைக்கப்பட்டது.