• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளையராஜாவின் பாட்டை பாடி யானையை தூங்க வைத்த பாகன்…!

October 26, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தூக்கமின்றி தவித்த யானையை அதன் உரிமையாளர் இளையராஜா பாட்டை பாடி தூங்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விஜய்சுந்தர் என்ற யானையை வளர்த்து வருகிறார்.கடந்த சில நாட்களாக யானை தூக்கமில்லாமல் தவித்து வந்தது.இதைக்கண்ட பாகன் குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைப்பது போல மலையாள பாடல் ஒன்றைப்பாடி தூங்கவைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பாடிய அந்த பாடல் 1984ல் வெளிவந்த மங்களம் நேருன்னு என்ற படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் மம்முட்டி நடிப்பில் வெளிந்த ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடல் தான்.இந்த பாடலை பாடலை கேட்டு தான் அந்த யானை மெய் மறந்து தூங்குகிறது.இசைஞானி இளையராஜா இசைக்கு மயங்காத ஜீவராசிகளே இல்லை என்பதற்கு இது ஒர் உதாரணம்.

மேலும் படிக்க