• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

IGEN அமைப்பும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இணையவழி சொற்பொழிவு

August 27, 2020 தண்டோரா குழு

IGEN அமைப்பும் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியும் இணைந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் “நிலையான விவசாயம்” பற்றிய இணையவழி சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது.

தி இன்ஸ்டியூசன் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ் நிறுவனம், கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியுடன் இணைந்து “நிலையான விவசாயம் என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற்றபெருந்தகைகளின் சொற் பொழிவினை இணையவழி வாயிலாக நடத்தியது.

IGEN அமைப்பின் தலைவர் முனைவர் எல்.ரமேஷ் உரையாற்றுகையில்,

IGEN அமைப்பானது பசுமையைப் பேணிகாக்கும் எண்ணம் கொண்ட நபர்களால் இலாப நோக்கமற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் குறிக்கோளானது நோபல் பரிசு பெற்ற சிந்தனையாளர்களின் கருத்துக்களை ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும்,தொழில் துறையினர்களுக்கும்,மற்றும் பொதுமக்களுக்கும் கொண்டு செல்வதாகும் என்றார்.

IGEN நோபல் பரிசு பெற்றவர்களின் விரிவுரைத் தொடரின் Noble Laureate Lecture Series (என்.எல்.எல்.எஸ்) நோக்கங்களை விவாதித்து, என்.எல்.எல்.எஸ் அமைப்பின் செயலாளரும் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் முதல்வருமான முனைவர்.மு.அகிலா, உலக நோபல் பரிசு பெற்றவர்களை ஒரே மன்றத்தின் கீழ் இணைக்கும் நோக்கத்தை எடுத்துரைத்தார். ஒரு நாட்டின் ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனுக்கும் சீரான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு என்.எல்.எல்.எஸ் முயற்சியெடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பாரம்பரியக் கலாச்சார நடனத்துடன் இந்த தொடர் சொற்பொழிவின் தொடக்க விழாவில் தெலுங்கான மாநில ஆளுநர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக நோபல் பரிசு பெற்ற நியூ இங்கிலாந்து பயோலேப்ஸ் இன் தலைமை அறிவியல் அதிகாரி சர் ரிச்சர்ட் ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இஸ்ரோ அமைப்பின் முன்னாள் திட்ட இயக்குனருமான பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
பத்மஸ்ரீ டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் உறவினரும், டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலருமான ஷேக் தாவுத் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முதன்மை விருந்தினர்
டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், தனது துவக்கவுரையில்,

விவசாயத்துறையினரின் தற்போதைய சூழ்நிலையை எடுத்துரைத்தார். மேலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தின் தாக்கத்தைப் பற்றியும், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் அவல நிலையைப் பற்றியும் விளக்கினார். பயிர்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் எதிர்கொள்ளும் சவால்களை அவர் கோடிட்டுக் காட்டினார்.மேலும்,இந்த தொடரைத் தொடங்குவதற்கும், அதன் முதல் சொற்பொழிவு “நிலையான வேளாண்மை” என்பதற்கு பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தற்கும் IGEN அமைப்பு மற்றும் கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி குழுவைப் பாராட்டினார்.

சிறப்பு விருந்தினரான நோபல் பரிசு பெற்ற சர் ரிச்சர்ட் ஜான் ராபர்ட்ஸ் பேசுகையில்,

சுமார் 800 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படுவதை குறிப்பிட்டு உணவே அவர்களின் மருந்து என்று பரிந்துரைத்தார். (மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள்) தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை வலியுறுத்தி, ஊட்டச்சத்துமிக்க பயிர்களை விளைவிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் கூறினார். ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் உணவு போதுமான அளவில் கிடைப்பதால் அது ஒரு பொருட்டே அல்ல, ஆனால் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியில்லா நாடுகளில் அதிக உணவு உற்பத்தி மிகவும் அவசியம் என்றார். மரபணு மாற்ற பயிர்கள் மிகவும் ஆபத்தானது என்ற கருத்துக்கள் நிலவுவதாகவும், ஆனால் நாம் எப்பொழுதும் இறுதியாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர உற்பத்தி முறைகளைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் நாடுகளில் உணவு பற்றாக்குறை அதிகமிருப்பதால் மரபணு மாற்ற உத்தியை மேற்கொண்டு அதிக மகசூல் பெறுவது அவசியம் என்றார்.

வைட்டமின் ஏ குறைபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றார்கள். மரபணுமாற்ற முறையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தங்க அரிசியில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகின்றது. மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் மனித சமூதாயத்திற்கு பல்வேறு தருணங்களில் உதவி செய்து வருகின்றது. மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் நோய் தாக்கம் இல்லாததாகவும் பல்வேறு மருத்துவகுணம் கொண்டதாகவும் உள்ளது என்றார்.

இறுதியில் IGEN நிறுவனத்தின் தூதுவர் டாக்டர்.இஸ்ரட் மீரா மிர்சனா நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மேலும் படிக்க