• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹைதரபாத்தில் போலீசார் கண்முன் ஒருவர் வெட்டிக்கொலை

September 26, 2018 தண்டோரா குழு

ஹைதராபாத்தில் சைப்ரபாத் பகுதியில் முன்பகை காரணமாக முக்கிய சாலை நடுவினில் பொதுமக்கள் எதிரில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கான மாநில தலைநகர் ஹைதராபாத்தில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய சாலையில் இன்று காலை முன்பகை காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதில் கொலை செய்யபட்டவர் பெயர் ரமேஷ் என்றும்,இவர் மீது ஏற்கனவே மகேஷ் குட் என்பவர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு இருக்கிறார்.இதற்காக இன்று நீதிமன்றம் சென்று வரும் வழியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நிகழும் போது அந்த இடத்தில் போலிஸாரும் இருந்துள்ளனர்.சுற்றிலும் பொது மக்கள் இருந்தபோதும் அடையாளம் தெரியாத நான்கு பேர் இந்த சம்பவத்தை செய்துள்ளனர்.ஒருவர் கொடாரியை கொண்டு ரமேஷ் என்பவரை அடிக்கும்போது,அதை தடுக்க வந்த பொதுமக்களை விரட்டுவதற்காக கட்டையை வைத்து மீதம் இருந்த மூன்று பேர் துரத்தியுள்ளனர்.இந்தக் காட்சி அங்கு இருந்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

ரமேஷ் சம்மந்தப்பட்டிருக்கும் கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட மகேஷ் என்பவரின் உறவினர்கள் தான் இச்செயலை செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.பின்னர்,இந்த கொலையை செய்துவிட்டு அவர்கள் நான்குபேரும் பைக்கில் தப்பித்துவிட்டனர்.இதையடுத்து,இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க