• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலால் மிகப்பெரிய ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்த ஹைதராபாத் மாணவி

December 30, 2017 தண்டோரா குழு

ஹைதராபாத் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் காலால் வரைந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஜானவி மாகண்டி(18). அவர் சுமார் 140 சதுர அடியில், தனது காலால் ஓவியம் ஒன்றை வரைந்தார். அந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது. பிரிட்டினில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தின் மாணவி சுமார் 100 சதுர அடியில் வரையப்பட்ட ஓவியம் தான் இதற்கு முன் உலக சாதனையாக இருந்தது தற்போது அந்த சாதனையை ஜானவி முறியடித்துள்ளார்.

ஜானவியின் பொழுதுபோக்குகளில் ஓவியம் வரைதலும் ஒன்று.அதோடு,அவர் ஒரு கலைஞர், நடன கலைஞர்,கிளாசிகல் இசை பாடகர், மற்றும் தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரும் கூட. நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது, காலால் ஓவியம் வரைய முடியும் என்பது அவருடைய தனிப்பட்ட திறமை ஆகும். அந்த திறமையை பயன்படுத்தி அவர் மயிலின் இறகையும், தாமரை மலரையும் தன்னுடைய காலால் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க