• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

#HungryForGold என்கிற முன்முயற்சியின் மூலம் அனைத்து விளையாட்டுகளின் மீதும் கவனம் செலுத்த அழைக்க்கும் பிரிட்டானியா & டேலண்ட்டட்

March 19, 2024 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி பிஸ்கட் பிராண்டான பிரிட்டானியா,நாட்டின் மிகப் பிரியமான விளையாட்டான கிரிக்கெட்டிற்கு அப்பால் உள்ள எண்ணற்ற விளையாட்டுகளின் மீதும் மக்களுக்கு ஒரு தாகத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊக்குவிப்பு முன்முயற்சியை துவங்கியுள்ளது.

ஒரு புதிய இலட்சியத்தினை கருத்தாக்கம் செய்வதற்கான பொறுப்பை பிரிட்டானியா, அதனைப் போலவே ஒருமித்த சிந்தனையும், நம்பிக்கையும் கொண்டுள்ள நிறுவனமான டேலண்ட்டட் ஏஜென்சியிடம் (Talented.Agency) ஒப்படைத்துள்ளது.இந்த முன்னெடுப்பில் JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் முயற்சியில் உருவானது தான் #HungryForGold (தங்கப் பதக்கத்திற்கான வேட்கை) என்கிற சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சார முன்முயற்சி – இதில் பல்வேறு விளையாட்டு பின்னணியைக் கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆறு தலைசிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

நீரஜ் சோப்ரா – ஈட்டி எறிதல்

லவ்லினா போர்கோஹைன்-
குத்துச்சண்டை

சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி & சிராக் ஷெட்டி – பேட்மிண்டன்

பவானி தேவி – வாள்வீச்சு

அவினாஷ் சேபிள் – ஸ்டீப்பிள்சேஸ்

பிரிட்டானியாவின் ஆறு மிகப்பெரிய பிராண்டுகளின் பேக்கேஜ் மீது ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் #HungryForGold பிரச்சாரம் பெருமையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுகர்வோர் அந்த பேக்கேஜ்களில் உள்ள குறியீட்டை ஸ்கேன் செய்து hungryforgold.com வலைதளத்தில் ஈட்டி எறிதல், குத்துச்சண்டை, பேட்மிண்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடலாம். ‘பிரிட்டானியா சாப்பிடுங்க, பாரிஸ் போங்க’ (‘Britannia Khao, Paris Jao’) என்கிற முன்வைப்பை மையமாகக் கொண்ட இந்தப் விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், அந்தந்த விளையாட்டுகளில் போட்டியிடும் நபர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நுகர்வோருக்கு பாரிஸுக்குச் செல்லும் வாய்ப்பை பிரிட்டானியா வழங்குகிறது.

இரண்டு மாத காலம் நடைபெறவுள்ள இந்த பிரச்சாரமானது – டிஜிட்டல், சமூக ஊடகங்கள், OTT, CTV,OOH என பல்வேறு தளங்களின் வழியாக விரிவாக கொண்டு சேர்க்கப்படுகிறது.

இந்த பிரச்சாரத்தை டேலண்டட்.ஏஜென்சி மற்றும் JSW ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் கருத்தாக்கம் செய்துள்ளன. hungryforgold.com வலைதளத்தில் உள்ள மொபைல் கேம்களை ‘பிக் சிட்டி புரமோஷன்ஸ்’ நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும், ரூட்டட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த விளம்பரப் படங்களுக்கான தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர், அமித் தோஷி இதுகுறித்து பேசுகையில்,

‘ஹங்க்ரி ஃபார் கோல்ட்’என்கிற எங்களது சமீபத்திய மார்கெட்டிங் முயற்சியை வெளியிடுவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.பெரும்பான்மையான கவனத்தை கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே ஈர்க்கும் நம் நாட்டில்,கிரிக்கெட் ஆடுகளத்திற்கு அப்பால் மற்ற விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குவதற்கான வேட்கையைத் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். ஆறு தலைசிறந்த விளையாட்டு வீரர்களுடன் ஒருங்கிணைந்து,ரசிக்கும் வகையிலான ஒரு கேமிங் விளம்பரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இதன் மூலம் அவர்களின் அசாத்தியமான சாதனைப் பயணங்களைக் காண்பித்தது மட்டுமல்லாமல் – பேட்மிண்டன், ஈட்டி எறிதல், ஸ்டீபிள்சேஸ் என பல்வேறு விளையாட்டுகளின் மீதும் நாட்டத்தை உருவாக்கி, உளமார பாராட்டியுள்ளோம். தினமும் மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையோடு பயணிக்கும் எங்களது விரிவான பிராண்டு ஆற்றலின் மூலம் – ஒவ்வொரு இந்தியரின் மனதில் பெருமையையும், ஒவ்வொரு விளையாட்டுத் துறையிலும் வெற்றிவாகை சூட வேண்டும் என்கிற உத்வேகத்தையும் விதைக்க விரும்புகிறோம்,” என்று கூறினார்.

JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின், தலைமை இயக்க அலுவலர் (COO) திவ்யான்ஷு சிங் பேசுகையில்,

“வளர்ந்து வரும் மற்றும் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளின் எழுச்சிக்காக JSW ஸ்போர்ட்ஸில் நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக இருந்து செயலாற்றி வருகிறோம். இந்த விளையாட்டுத் துறைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு மார்கெட்டிங், விளம்பரப்படுத்துதல் மற்றும் பொது நலன் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம் சிறப்பாக ஊக்கமளிக்க முடியும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். கடந்த காலங்களில் மறக்கமுடியாத வகையில் வெற்றிகரமான பல விளையாட்டு விளம்பரப் பிரச்சாரங்களின் பின்னணியில் பிரிட்டானியா இருந்துள்ளது.

‘ஹங்க்ரி ஃபார் கோல்டு’ என்கிற இந்த பிரச்சாரமும் அதே வழியில் உருவாக்கப்பட்டதாகும் – தலைசிறந்த படைப்பின் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதன் உருவாக்கத்தில் எங்கள் பங்களிப்பையும் வழங்கியது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்; மேலும், இந்த முயற்சி மாபெரும் வெற்றியயடையும் என்றும் நாங்கள் நம்புகிறோம்”, என்றார்.

கிரியேட்டிவ்.டேலன்ட் நிறுவனத்தை சேர்ந்த பெர்ல் அலெக்ஸ் கூறுகையில்,

“ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது கால் பகுதியாவது ஆண்கள் கிரிக்கெட் சார்ந்த விளம்பரங்களுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது என்கிற உண்மையை, இந்திய விளம்பரத் துறையில் பணியாற்றும் எனது சகாக்களும் ஏற்பார்கள் என்பதே நிதர்சனம். அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கிய & பன்முகத்தன்மையுடன் கூடிய ஒரு விளம்பர வடிவமைப்பு என்பது புதிதான மற்றும் மிக அரிதான விஷயமாகும். நம் அனைவரின் ஒட்டுமொத்த நம்பிக்கை என்கிற மொழியின் மூலம் பல இந்தியர்களிடம் இந்த கருத்தை கொண்டு சேர்ப்பது என்பது ஒரு அற்புதமான சவாலாக இருந்தது”, என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க