October 9, 2018
தண்டோரா குழு
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்திவெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து,நக்கீரன் கோபாலுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு வந்த மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார்.பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது எச்.ராஜா,எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நக்கீரன் கோபாலை கைது செய்தது ஏன்? கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”சிலர் பேட்டிய துவங்கு முன் என்ன கேள்வி என கேட்டுக்கொண்டு பின் பதிலளிப்பார்.இவரோ என்ன கேள்வி கேட்டாலும் H Raja,SVE Shekherஐ ஏன் இன்னும் கைது பண்ணலன்னு பதில் கேள்வி கேட்டுட்டுதான் பேச ஆரம்பிப்பாராம்.இது ஒரு PHOBIA.வரும் மே மாதம் சரியாகிவிடும் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு ட்விட்டில்,”தன் வினை தன்னைச்சுடும்”.“தெய்வம் நின்று கொல்லும்”.“தீதும் நன்றும் பிறர் தர வாரா”.“சொந்த காசுல சூன்யம்”.இன்றய அரசியல் பலா பலன்கள்.யாருக்கு எதுன்னு சொல்லுங்க என பதிவிட்டுள்ளார்.