• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது :மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

September 26, 2016 தண்டோரா குழு

கோவையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் குடும்பத்தினரை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இந்து இயக்கங்களை சார்ந்தவர்கள் கொலை செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.கோவையில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருந்தால் சசிகுமாரின் மரணம் தடுக்கப்பட்டிருக்கும் எனவும்
கூறினார்.

மேலும் இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுக்க வேண்டும்.மேலும்,இது போன்ற சம்பவங்களின் பின்னணியில் மதம் இல்லை என கூறிய அவர் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர் காவல் துறையினர் தமிழகம் முழுவதும் உள்ள பயங்கரவாத்கிகளை அடையாளம் காணும் வகையில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள இந்த நேரத்தில் கோவையில் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது என்பதை காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் அப்போது கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க