December 28, 2017
தண்டோரா குழு
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய கார் ஒன்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சர்வாதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர்.அவர் பயன்படுத்திய ஆடம்பரமான கார் ஒன்று,ஜனவரி மாதம் 17ம் தேதி அமெரிக்காவில்,நடைபெறும் ஏலத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
இந்த காரின் முன் இருக்கையில் நின்று ஹிட்லர் பயணம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார்.இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, அமெரிக்காவில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலரின் கைக்கு மாறியை இந்த வாகனம், கடந்த 2002ம் ஆண்டு, ஐரோப்பாவை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக நடந்த போரில், ஜெர்மனி நாடு வெற்றிபெற்றபோது, பெர்லின் நகரில் நடந்த வெற்றி அணிவகுப்பில் இந்த வாகனத்த்தில் தான் ஹிட்லர் பயணம் செய்தார்.
மேலும், இத்தாலி நாட்டின் அப்போதைய சர்வதிகாரியாக இருந்த முசோலினி ஜெர்மனி நாட்டிற்கு, அரசு பயணம் மேற்கொண்ட போது, அந்த வாகனத்தில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.