• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீக்குளித்த இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் சிகிச்சை பலனின்றி பலி

October 8, 2016 தண்டோரா குழு

கோவை போத்தனூரில் கடந்த 3 ந் தேதி தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த செப் 22ம் தேதி கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. வன்முறையில் ஈடுபட்டதாக காவல் துறையினர் 800 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குபதிவு செய்து பலரை கைது செய்தனர். தற்போது, சசிக்குமார் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக தேடியும் வருகின்றனர்.

இந்நிலையில் , கடந்த 3ம் தேதி இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த்குமார் என்பவர் போத்தனூரில் உள்ள தனது வீட்டில் திடீரென தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செப் 23ல் இந்துமுன்னணி சசிக்குமார் கொலையை அடுத்து வன்முறையில் ஈடுபட்டதற்காக காவல்துறையினர் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தற்கொலைக்கு அவர் முயற்சித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த்குமார் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனந்த குமார் சகோதரர் ரஞ்சித்குமார் நேற்று தற்கொலைக்கு முயன்று அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க