January 12, 2018
தண்டோரா குழு
பிரபல ஹிந்தி எழுத்தாளர் தூத்நாத் சிங் இன்று(ஜன 12) காலமானார்.
உத்தர பிரதேஷ் மாநிலத்தின் பாலியா நகரை சேர்ந்தவர் பிரபல ஹிந்தி எழுத்தாளர் தூத்நாத் சிங். கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை(ஜன 12)காலமானார்.
மறைந்த தூத்நாத் சிங் உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பிறகு, அதே பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும், அரசியல் வர்ணனையாளர்களில் மிகவும் தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.