• Download mobile app
03 Nov 2025, MondayEdition - 3554
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனமழை காரணமாக கொல்லம்-செங்கோட்டை ரயில் சேவை நிறுத்தம்

August 15, 2018 தண்டோரா குழு

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்-செங்கோட்டை இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர்.50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டை-கொல்லம் இடையிலான ரயில்பாதையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும்,மண்சரிந்தும் தண்டவாளத்தில் விழுந்துள்ளன.இதனால் செங்கோட்டை-கொல்லம் தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும்,நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மண் சரிந்துள்ளதால் அந்தத் தடத்திலும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க