• Download mobile app
17 Oct 2025, FridayEdition - 3537
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லியில் கடுமையான பனிமூட்டம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

December 17, 2016 தண்டோரா குழு

தில்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக 12 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தில்லி ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
கடந்த சில நாட்களாகவே தில்லியில், வட மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக விமானம், ரயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில், சனிக்கிழமை தில்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 56 ரயில்கள் தாமதமாக பயணித்துள்ளது.

பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முகப்பு விளக்கு எரிந்தவாறே மக்கள் ஒட்டி செல்கின்றனர்.

இது குறித்து தில்லி வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக தலைநகர் தில்லியில் 400 மீட்டர் தொலைவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கணக்கிடப்பட்ட வானிலை தகவலின்படி, வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு 92% உள்ளது. வெப்பத்தின் அளவு 8.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இன்னும் சில தினங்கள் வானம் தெளிவாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க