• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

September 23, 2016 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து முதல்அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

அதைப்போல், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்(பொறுப்பு),கர்நாடக முதல்வர் சித்தராமையா,திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.க கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ,பாஜக தலைவர் தமிழசை சவுந்தர ராஜன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் முத்தரசன், சமக தலைவர் சரத்குமார், நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்கு குணமடைந்து வரும் நிலையில் மேலும் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கருதுவதால் வரும் ஞாயிறு மாலை அல்லது திங்கட்கிழமை அன்று டிஸ்சார்ஜ் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க