• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் தப்பி ஓட்டம்

December 7, 2017 தண்டோரா குழு

மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி கொலை, வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில்,தஷ்வந்த்தின் தாய் சரளா அவரது வீட்டில் கொலை செய்யபட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.வீட்டிலிருந்த நகை, பணம் கொள்ளை போயுள்ளது. தஷ்வந்தும் வீட்டில் இல்லை. இதனால், தஷ்வந்த் மீதான சந்தேகம் போலீஸுக்கு வலுத்துள்ளது.

இதையடுத்து, தலைமறைவான தஸ்வந்த் சிங்கை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தஷ்வந்தை மும்பையில் நேற்று போலீசார் கைதுசெய்தனர்.

தாயை கொன்ற வழக்கில், மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை வரும் சனிக்கிழமை தமிழக சிறையில் அடைக்க மும்பை பாந்த்ரா நீதிமன்றம் உத்தவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து தஷ்வந்த் இன்று இரவு சென்னை அழைத்து வர ஏற்பாடுகள் செய்தனர். அப்போது,பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த்தப்பியோடியுள்ளார். தப்பியோடிய தஷ்வந்த்தை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க