January 27, 2018
தண்டோரா குழு
ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள நிலையில் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று(ஜன 27) காலை தொடங்கியது.
இந்த ஏலத்தில் கடந்த முறை மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை சென்னை அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இது குறித்து ட்விட்டரில் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில்
“வணக்கம் தமிழ்நாடு… என்னுடைய புது வீட்டில் விளையாடுவது மகிழ்ச்சி; உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண் இனி என்னை சிங்கமுன்னு வைக்கணும்” என்று பதிவிட்டுள்ளார்.