• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை ஆர்பாட்டத்தில் தமிழிசை மற்றும் எச்.ராஜா உள்பட 500 பேர் கைது

September 28, 2016 தண்டோரா குழு

கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலையை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் கோவையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து இருந்தார்.அதன்படி இன்று காலை முதலே எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பினர் ஏராளமானோர் திரண்டனர்.சசிகுமார் கொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இணை கமிஷனர் அன்பு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்தனர். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர்.இதனால் ஆவேசம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் போலீஸ் இணை கமிஷனர் அன்புவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா,உள்பட 500 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க