• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து சுயேட்சை வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி!

December 18, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிட்ட தலித் உரிமைச் செயற்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு சௌராஸ்டிரப் பகுதியான உனாவில் மாட்டின் தோலை உரித்ததாக தலித் மக்கள் நான்கு பேரை மதவெறியர்கள் கடுமையாகத் தாக்கினர். இந்த வன்கொடுமையை எதிர்த்து அந்தப் பகுதியில் எழுச்சிப் பேரணியை நடத்தியதன் மூலம் பிரபலமானவர், ஜிக்னேஷ் மேவானி.

அதன்பின் தொடர்ந்து தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் பாஜகவின் அரசியலை எதிர்த்தும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம், பேரணி நடத்தினார். அகமதாபாத் நகரிலிருந்து உனா நகரில் நான்கு தலித் மக்களுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதோ, அதே ஊரை நோக்கி பேரணியாகச் சென்று ஆகஸ்ட் 15ஆம் தேதி அங்கு பொதுக்கூட்டம் நடத்தினார் மேவானி.

அரசியல் கட்சிகளின் கூட்டத்தை விஞ்சும் வகையில் அந்தக் கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனி தொகுதியில் சுயேட்சையாக மேவானி போட்டியிட்டார்.

இதனைத்தொடர்ந்து போட்டியிடாமல் விலகிக்கொள்வதாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்தன.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் 90,375 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து, பாஜகவின் சார்பில் போட்டியிட்ட விஜய் சக்ரவர்த்திக்கும் ஜிக்னேசுக்கும் தான் போட்டி எனும் நிலையில், ஜிக்னேசுக்கு 63, 471 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளருக்கு 42,429 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் 18,150 வாக்குகள் அதிகம் பெற்று ஜிக்னேஷ் மேவானி சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகியுள்ளார்.

மேலும் படிக்க