213 பொருள்களுக்கான குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் அஸ்ஸாம் தலைநகர் கெளகாத்தியில் கடந்த 10-ந்தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில், அதிகபட்சமாக 28 சதவிகித வரி விதிப்புக்கு உள்ளான 227 பொருள்களில், 213 பொருள்களின் வரியைக் குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி,சாக்லெட், மரச்சாமான்கள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, மார்பிள், டைல்ஸ், டி.வி., வானொலி உள்ளிட்ட 178 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 28 சதவீதம் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஓட்டல்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி விதிப்பு மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்
கோவை வடவள்ளியில் பிரீத்வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மையம் புதிதாக தொடக்கம்
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு