• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்ருதாவை சந்தித்து ஆறுதல் கூறிய கவுசல்யா!

September 21, 2018 தண்டோரா குழு

தெலுங்கானாவில் ஆணவக் கொலையால் கணவர் பிரணாய் குமாரை இழந்த அம்ருதவர்ஷினியை தமிழகத்தைச் சேர்ந்த கவுசல்யா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம்,மிர்யலகுடா என்னும் பகுதியைச் சேர்ந்த பிரணாய் குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்டார்கள்.பிரணாய் வீட்டில் எதிர்ப்பு இல்லை என்றாலும் அம்ருதாவின் தந்தை இவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால்,அம்ருதா பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில்,3 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வீடு திரும்பும் போது மருத்துவமனை வளாகத்தில் அவர்களை பின்தொடர்ந்து வந்த சுபாஷ் சர்மா என்ற கூலிப்படை கொலையாளி,பிரணாயை பின்னிருந்து தாக்கி கழுத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். அம்ருதாவின் அப்பா மாருதி ராவ் தான் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி.

இதனிடையே அம்ருதாவின் தந்தை 1 கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை அமைத்து பிரணாயை அம்ருதா கண்முன்னே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கொலைச் சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில்,அம்ருதாவைப் போன்று தன் கண் முன்பே காதல் கணவனைப் பறிகொடுத்துவிட்டு சாதி ஒழிப்புப் போராளியாக உருமாறியிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த கெளசல்யா,இன்று அம்ருதாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது,அம்ருதாவிடம் கவுசல்யா, சங்கர் படுகொலை குறித்து விளக்கினார். அதைபோல் சங்கர் கொலை செய்யப்பட்ட வீடியோவையும் காட்டியுள்ளார்.

மேலும்,வழக்கறிஞர்கள் அவருக்கு இந்த வழக்கில் எப்படி போராட வேண்டும் என்று கூறியுள்ளனர்.வழக்கு விசாரணையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்து இருக்கிறார்கள்.வழக்குகளை சந்திக்கலாம் வா என்று ஆறுதல் அளித்துள்ளனர்.கெளசல்யாவைப் போன்றே அம்ருதாவும் சாதிக்கு எதிராக தான் போராடப் போவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க