January 11, 2018
தண்டோரா குழு
நாணயங்களை உற்பத்தி செய்யும் பணியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய நாணயங்களை உற்பத்தி செய்வதற்காக, நொய்டா, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நான்கு இடங்களில் நாணய அச்சடிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன.இந்த நாணய ஆலைகளில் உற்பத்தியாகும் நாணயங்கள், ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் சந்தைக்களில் அதிகப்படியான நாணயங்கள் தேக்கம் அடைந்திருப்பதாகவும், உற்பத்தி செய்யும் நாணயங்களை சேமித்து வைப்பதற்கான போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாகவும் நாணயங்கள் அச்சிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,நாணயங்களின் பற்றாக்குறை இல்லாததால்,நாணயங்களை அச்சிடுவதை நிறுத்துவதால், புழக்கத்தில் உள்ள நாணயங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.