October 9, 2018
தண்டோரா குழு
அரசு பேருந்தின் நிலை குறித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகளின் பயணிகள் கட்டணம் கடுமையாக உயா்த்தப்பட்டது.இதனால் பேருந்து சேவையை நம்பி இருக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.மழைக் காரணமாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகள் பழுதடைந்து,ஓட்டை,உடைசல் காரணமாக பேருந்தின் உள்ளேயும் மழை பெய்கிறது.
இதற்கிடையில்,பழனியில் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் விஜய்குமார் தான் இயக்கும் பேருந்தின் நிலையை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.அதில் முறையாக பிரேக் இல்லை மழை தண்ணீர் பேருந்தின் உள்ளே விழுகிறது இப்படி ஆபத்து நிறைந்த பேருந்தை தினமும் இயக்கிறேன் என்று வீடியோவில் பேசி பதிவு செய்துள்ளார்.இதனையடுத்து,வேலை நேரத்தில் வேலை செய்யாமலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.