December 29, 2017
தண்டோரா குழு
கர்நாடகாவின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர், குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவின் 113வது பிறந்தநாளையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
கர்நாடாக மாநிலத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர், நாவல் எழுத்தாளர், மற்றும் விமர்சகர் ஆவார்.
கர்நாடக மாநிலத்தின் கன்னட மொழியில் கல்வி கற்பிக்க வழிவகுத்த பெருமை அவரையே சாரும். அவர் எழுதிய ‘ஸ்ரீ இராமாயண தர்ஷனம்’ என்ற நூலுக்கு ‘ஜனந்பித் விருது’ வழங்கப்பட்டது.கன்னட மாநிலத்தின் மாநில கீதமான “Jaya BharathJananiyaTanujate” வை எழுதினார். கன்னட எழுத்தாளர்களில் ‘ஜனந்பித் விருது’ பெற்ற பெருமையும் அவரையே சேரும். நவீன இந்திய இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும்,கடந்த 1988ம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1904ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்தின் சிக்மங்களூர் மாவட்டத்தில் பிறந்த அவரின் 113வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.