July 5, 2018
தண்டோரா குழு
‘Go Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வந்தபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காண்பித்தன.Go Back Modiஎன்ற வாசகமும் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனாது.
இதற்கிடையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் 9 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. ‘Go Back Modi’ என சொன்ன தமிழகம் ‘Come Back Modi’ என சொல்லும் காலம் விரைவில் வரும்.மேலும், சட்டசபைக்கு ஸ்டாலின் கிழிந்த சட்டை அல்லது கறுப்பு சட்டையுடன் மட்டுமே செல்வார் எனவும், தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை மூடுவதே கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை எனவும் அவர் தெரிவித்தார்.