• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இறந்த பிறகும் மகளின் பிறந்த நாளுக்கு மலருடன் வாழ்த்து கூறும் தந்தை

November 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் இறந்துபோன தந்தையிடமிருந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மலர் கொத்து பெறும் ஒரு பெண்ணின் ட்விட்டர் பதிவு வைராலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக்கல், இவர் தனது மகளான பெய்லி செல்லருக்கு 21 வயது ஆகும் வரை அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மலர்ச்செண்டு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இந்நிலையில் மைக்கேல் செல்லர்ஸ் புற்று நோயால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்துவிட்டார். ஆனால் கடந்த 4 வருடங்களாக பெய்லிக்கு அவரது தந்தை சார்பில் சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.

தற்போது, பெய்லிக்கு 21வயது ஆகிறது. அவளுடைய தந்தையிடம் இருந்து கடைசி மலர் கொத்தையும் தனிப்பட்ட கடிதமும் அவளுக்கு கிடைத்து.

அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தாவது: “நாம் மீண்டும் சந்திக்கும் வரை, இதுவே என்னுடைய கடைசி கடிதம். எனக்காக நீ கண்ணீர் சிந்துவதை நான் விரும்பவில்லை. நான் வேறொரு நல்ல இடத்தில் இருக்கிறேன். மகிழ்ச்சியாக இரு. நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்” என்று எழுதப்படிருந்தது.

பெய்லி ஒவ்வொரு ஆண்டும் தனக்கு கிடைக்கும் மலர் கொத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அதேபோல் இந்த ஆண்டும், தனது தந்தையிடம் இருந்து பெற்றுக்கொண்ட செய்தியை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அந்த பதிவு வைராலாக பரவியுள்ளது.

மேலும் படிக்க