• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்தியடிகள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காதி கிராப்ட்டில் சிறப்பு விற்பனை துவக்கம்

October 2, 2018 தண்டோரா குழு

காந்தியடிகள் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் காதி கிராப்ட்டில் காதி ஆடைகள் சிறப்பு விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்.

காந்தியடிகள் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி மேம்பாலம் அருகில் உள்ள காதி கிராப்ட் அலுவலகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இவ்விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன்,மாவட்ட வருவாய் அலுவலர் கலந்துக் கொண்டனர்.

கடந்தாண்டு கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 1.53 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும்,இந்தாண்டு 2.53 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.கதர் ஆடை விற்பனையை ஊக்குவிக்க அனைத்து மக்களும் முன்வர வேண்டும் எனவும் இதில் வலியுறுத்தப்பட்டது.

மேலும்,கடந்தாண்டை போல நடப்பு ஆண்டிற்கும் மத்திய மாநில அரசுகள் கதர்,பட்டு,பாலியஸ்டர்,உல்லன் பொருட்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை அளிக்கப்பட்டுள்ளது.இவ்விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க