January 22, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஜான் கென்னடியின் பட்டு ஸ்கார்ப் ஏலத்திற்கு வருகிறது.
அமெரிக்க நாட்டின் 35வது குடியரசு தலைவராக இருந்தவர் ஜான் கென்னடி.இவர் கடந்த 1963ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டார்.அமெரிக்காவில் உள்ள ஆர்.ஆர் ஏல நிறுவனம் கென்னடியின் பட்டு ஸ்கார்பை ஏலம் விடவுள்ளது.இந்த ஸ்கார்ப் சுமார் 6,000 டாலர் வரை விற்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆன்லைன் மூலம் நடக்கும் இந்த ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதியோடு முடிவடைகிறது.
இந்த பட்டு ஸ்கார்பை கென்னடி காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்ற காலம் முதல் செனட்டராக பணியாற்றிய காலம் வரை பயன்படுத்தினார்.மேலும் ஜான் கென்னெடியின் சுருக்கமான “JFK” என்ற வார்த்தை எம்ப்ராய்ட்டரி மூலம் செய்யப்பட்டிருந்தது.
மேலும்,இந்த ஸ்கார்பை தயாரித்த நிறுவனம் வின்ஸ்டன் சர்ச்சில், ஹென்றி போர்ட் மற்றும் கிளார்க் கேபல் ஆகியோருக்கு பல ஆண்டுகளளாக தரமான ஆடைகளை வடிவமைத்து தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.