August 17, 2018
தண்டோரா குழு
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வாஜ்பாய் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பா.ஜ.,தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு பா.ஜ.க, தலைவர் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் இன்று மதியம் 2 மணியளவில் துவங்கியது.இறுதி ஊர்வலத்தில் பிரதமர் மோடி நடந்து சென்று பங்கேற்றார்.மேலும் பா.ஜ.க,தலைவர் அமித்ஷா,அத்வானி,மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.,தொண்டர்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.