• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளியே பயிரை மேய்ந்த கதை. வனத்துறையினர் சஸ்பென்ட்

August 6, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைரக்கல் எனப்படும் பளபளப்பான கற்கள் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தப் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் அப்பகுதியில் அந்தக் கற்களைத் தேட வனத்துறையினர் தடை விதித்துள்ளதோடு, மனிதர்கள் அப்பகுதியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சமீபகாலமாக அடிக்கடி சிலர் உள்ளே சென்று வைரக்கல் எனப்படும் பளபளப்பான கற்களைத் தேடி வந்தனர். இது குறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் நடத்திய ரகசிய தேடுதல் வேட்டையில், வைரக்கல் தோண்ட முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு வனக்காப்பாளர்களே துணைபோனது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வனக்காப்பாளர்கள் அசோக்குமார், கர்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் காஞ்சனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்குப் பெயர்தான் வேலையே பயிரை மேய்வதோ?

மேலும் படிக்க