October 12, 2017 தண்டோரா குழு
வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், 37 பேர் பலியாகியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் காணமால் போயுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டின் 6 மத்திய மாகாணங்கள் மற்றும் 6 வட மாகாணங்களில் உள்ள 1,௦௦௦ வீடுகள் சேதமடைந்தன. மேலும் 16,740 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்நாட்டின் வட மாகாணமான ஹோ பின் பகுதியில் ஏற்பட்ட நிலசரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 21 காணாமல் போய்விட்டனர்.
இந்த வெள்ளத்தால் வியட்நாம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன.
வியட்நாம் நாட்டின் நின் பின் பகுதியிலிருந்து சுமார் 2௦௦,௦௦௦ பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபடுள்ளனர்.மேலும்,காணாமல் போனர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வியட்நாமில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.